×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை, கன்னியாகுமரி, நாகர்கோவில், ராமநாதபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து ஜன.12,19,26-ல் மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கத்தில் ஜன.13,20,27-ல் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு காலை 4.55 மணிக்கு நெல்லை செல்லும்.

தாம்பரத்தில் இருந்து ஜன.13 இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.30 மணிக்கு குமரி சென்றடையும். மறுமார்க்கத்தில் ஜன.14-ல் பிற்பகல் 3.30 மணிக்கு குமரியில் இருந்து புறப்பட்டு காலை 6.15 மணிக்கு தாம்பரம் செல்லும். சென்னை சென்ட்ரலில் இருந்து ஜன.12,19-ல் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 1 மணிக்கு நாகர்கோவில் செல்லும். மறுமார்க்கத்தில் ஜன.13,20-ல் நாகர்கோவிலில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும்

ராமநாதபுரத்தில் இருந்து ஜன.10,12,17 பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு காலை 3.30க்கு தாம்பரம் செல்லும். தாம்பரத்தில் இருந்து ஜன.11,13,18-ல் மாலை 5 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரத்துக்கு காலை 5.15க்கு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Southern ,Pongal Festival: Southern Railway Announcement ,Chennai ,Southern Railway ,Pongal festival ,Ramanathapurat ,Nella ,Kanyakumari ,Nagarko ,Paddy ,Districts ,Railway ,Dinakaran ,
× RELATED தெற்கு ரயில்வே புதிய அட்டவணை: இன்று முதல் அமல்