×

மணலி ஜேடர்பாளையத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை கலெக்டர் ஆய்வு

திருச்செங்கோடு, டிச. 24: திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம் மணலி ஜேடர்பாளையத்தில் கனமழை பெய்ததால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன. நேற்று மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டார். அவருடன் பரமத்திவேலூர் எம்எல்ஏ சேகர், அட்மா தலைவர் தங்கவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனம், லோகமணிகண்டன், விஏஓ.,க்கள் பிரபுகுமார், நந்தகுமார், ஆர்ஐ சாந்தகுமார், கணகவள்ளி, உதவி செயற்பொறியாளர் சாந்தி, உதவி பொறியாளர் சந்திரன் மற்றும் அதிகார்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் தங்கள் ஊருக்கு செல்ல தார்ச்சாலை தேவை எனவும், பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் கற்கள் பதித்து தரும்படியும் கோரிக்கை விடுத்தனர். ஆவன செய்து தருவதாக கலெக்டர் கூறினார்.

The post மணலி ஜேடர்பாளையத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Manali Jedarpalayam ,Thiruchengode ,Elachipalayam ,Thiruchengode taluka ,
× RELATED திருமணமான 20 நாளில் கணவரை ஏமாற்றி...