புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி நாளை மதியம் 2 மணி முதல் ஜன.1ம் தேதி காலை 6 மணி வரை ஒயிட் டவுன் பகுதியில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆம்பூர் சாலையில் இருந்து கிழக்கு நோக்கி கடற்கரை செல்லும் அனைத்து சாலைகளும் தற்காலிகமாக மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.