சென்னை: சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் 2வது நாளாக அன்புமணி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். புதிய அலுவலகத்தில் 2வது நாளாக பாமக மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி ஆலோசனை நடத்தினார். பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமிக்க கட்சி பொதுக்குழுவில் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.