சென்னை: வடபழனியில் கணவருக்கு தெரியாமல் உல்லாசமாக இருந்த ஆண் நண்பருடன் சேர்த்து வைக்கக் கோரி, வடபழனி காவல் நிலையம் முன்பு இன்று அதிகாலை குடிபோதையில் கிளப் டான்சர் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வடபழனி காவல் நிலையத்திற்கு இன்று அதிகாலை 1 மணிக்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார். இவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பெண், வாய் மொழியாக தனது ஆண் நண்பர் என்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த போலீசார் இரவு ரோந்து பணிக்கு சென்றுவிட்டனர். காவல் நிலையத்தில் பாராவில் பெண் காவலர் ஆர்த்தி மட்டும் இருந்தார்.
இதனால் அவர், காலையில் வந்து எழுத்து பூர்வமாக புகார் அளிக்க வேண்டும் என்று கூறி அனுப்பி உள்ளார். உடனே போதையில் இருந்து பெண், வேகமாக காவல் நிலையம் முன்பு நிறுத்தி ைவத்திருந்த தனது ஸ்கூட்டரில் ஏற்கனவே தயாராக வைத்திருந்த ஒரு லிட்டர் பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி, எனக்கு நியாயம் வேண்டும். எனது ஆண் நண்பரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறி தீவைக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத பெண் காவலர் ஆர்த்தி, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பெண் உடலில் தண்ணீரை உற்றி மீட்டனர். பின்னர் சம்பவம் குறித்து இரவு பணியில் இருந்த எம்ஜிஆர் நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்முக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் அம்மு, தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது, ‘வடபழனி வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்த தீபா(35)(பெயர்மாற்றப்பட்டுள்ளது) என்றும், இவருக்கு திருமணம் நடந்து தனது கணவருடன் ஒன்றாக வசித்து வருகிறார். டான்சரான இவர், தற்போது இரவு நேரக்கிளப் ஒன்றில் டான்சராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வடபழனி அழகிரி நகர் 3வது தெருவை சேர்ந்த அறிவழகன்(34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அரிவழகன் கேட்ரிங் பணி செய்து வருகிறார். இவர், திருமணம் முடிந்து தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இருந்தாலும், தீபாவும், அறிவழகனும் ஒருவரை ஒருவர் தங்களது வீட்டுக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் தீபாவை, அறிவழகன் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி அடிக்கடி இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அறிவழகன் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி தீபா வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் அறிவழகன் எனது மனைவியை விட்டு நான் உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். தற்போது உள்ளது போல் எப்போது நாம் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திக்கலாம் என்று கூறியுள்ளார். இதனால் தீபாவுக்கும் கள்ளக்காதலன் அறிவழகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே நேற்று இரவு தீபா, தனது காதலன் அறிவழகனை கிளப்பில் சந்தித்து இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது தீபா தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கூறி தொந்தரவு செய்துள்ளார். அதற்கு அறிவழகன் மறுத்துள்ளார். உடனே ஆத்திரமடைந்த தீபா கிளப்பில் இருந்து தனது ஸ்கூட்டரில் புறப்பட்டு பெட்ரோல் நிலையத்திற்கு சென்று ஒரு லிட்டர் பெட்ரோலை கேனில் வாங்கி வாகனத்தில் வைத்து கொண்டு, நேராக வடபழனி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தது தெரியவந்தது.
அதைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் அம்மு, போதையில் இருந்த தீபாவை அவரது கணவர் மற்றும் கள்ளக்காதலன் அறிவழகனையும் போன் செய்து வரழைத்து பிரச்னை தொடர்பாக நாளை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் படி கூறி இருதரப்பினரிடமும் எழுதி வாங்கி கொண்டு அனுப்பிவைத்தார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் வடபழனி காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
The post உல்லாசமாக இருந்த ஆண் நண்பருடன் சேர்த்து வைக்க கோரி வடபழனி காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற கிளப் டான்சர்: போதையில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.