ஜீயபுரம், டிச.30: திருச்சி தெற்கு மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றிய மதிமுக துணை செயலாளர் கண்ணன் (எ) ஜெயக்குமார் கடந்த மாதம் 21ம்தேதி திருச்சி-கரூர் சாலையில் முத்தரசநல்லூர் அருகே நடந்த விபத்தில் இறந்தார். அல்லூரில் உள்ள அவரது வீட்டிற்கு திருச்சி எம்பி துரை வைகோ நேற்று நேரில் சென்று ஜெயராமன் மனைவி ஆனந்தி, மகன் தனுஷ்குமார், மகள் ரேஷ்மா உள்ளிட்டோருக்குஆறுதல் கூறினார்.
இதேபோன்று உடல் நல குறைவால் காலமான அந்தநல்லூர் ஒன்றிய அவைத்தலைவர் ஆத்மநாதன் வீட்டிற்குச் சென்று அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, வடக்கு மாவட்ட செயலாளர் சேரன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சுரேஷ், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாநில மாணவர் அணி அமைப்பாளர் பால சசிகுமார், அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் சாத்தனூர் சுரேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
The post சாலை விபத்தில் இறந்த மதிமுக துணை செயலாளர் குடும்பத்திற்கு எம்பி ஆறுதல் appeared first on Dinakaran.