திருச்சி, டிச.30: கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை நிறுவப்பட்ட வெள்ளிவிழாவினை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பொதுமக்களுக்கு திருக்குறள் தொடர்பான வினாக்களிலிருந்து வினாடி வினா போட்டி நேற்று நடந்தது. துவாக்குடி அரசினர் கலைக் கல்லுாரி தமிழாய்வுத்துறை உதவிப் பேராசியர் பகவத்கீதா நெறியாளராக செயல்பட்டார். போட்டியில் 82 வாசகர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பிரியதர்ஷினி முதல் இடத்தையும், உறையூர் ஹீமெரா பர்வின் இரண்டாம் இடத்தையும், எடத்தெரு பிரியதர்ஷினி மற்றும் முசிறி மூர்த்தி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியினை வாசகர் வட்டத்தலைவர் கோவிந்தசாமி துவக்கி வைத்தார், துணைத்தலைவர் நன்மாறன், வாசகர் வட்ட ஆலோசகர் அருணாச்சலம், வாசக வட்ட நிர்வாகிகள், நூலகர்கள் ஒருங்கிணைந்து இப்போட்டியினை நடத்தினர். முடிவில் மாவட்ட மைய முதல் நிலை நூலகர் சு.தனலெட்சுமி நன்றி கூறினார். இதனை தொடர்ந்து இன்று (டிச.30) காலை 10.30 மணிக்கு நான் ரசித்த வள்ளுவம் என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா உரையாற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
The post மாவட்ட மைய நூலகத்தில் இன்று கருத்தரங்கம் appeared first on Dinakaran.