×

கொளத்தூர் தொகுதியில் திட்ட பணிகளை அமைச்சர் ஆய்வு

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, கொளத்தூர் மற்றும் திரு.வி.கநகர் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகளை நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குறிப்பாக, கொளத்துார் 70 அடி சாலை, ராம்நகர், செல்லியம்மன் காலனி மற்றும் பாலாஜி நகர் பிரதான சாலை, பாரதி நகர் ஆகிய பகுதியில் புதிதாக சார் பதிவாளர் அலுவலக கட்டிடங்கள் அமைப்பதற்கான இடங்களை பார்வையிட்டார். ஆய்வின் போது, சென்னை மாநகர மேயர் பிரியா, சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, முதன்மைச் செயலர் அலுவலர் சிவ ஞானம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post கொளத்தூர் தொகுதியில் திட்ட பணிகளை அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kolathur ,Chennai ,Chennai Metropolitan Development Corporation ,Hindu ,Endowments ,Minister ,P.K. Sekarbabu ,Thiru.V.Kanagar ,Kolathur 70 Feet Road, Ramnagar ,
× RELATED தேர்தல் தோல்விக்கு பரிகாரமாக...