×

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகள், பெண் பேராசிரியர்கள் நலனுக்காக 16 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகள், பெண் பேராசிரியர்கள் நலனுக்காக 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பணிகளுக்கு குழு அமைத்து தேவையான தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவு அளித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் 40 காவலாளிகளை நியமிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே 140 காவலாளிகள் இருக்கும் நிலையில் எண்ணிக்கையை 180ஆக உயர்த்த முடிவு செய்தனர். விடுதிகளில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வார்டன்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை.யில் 30 புதிய சிசிடிவி கேமராக்களை பொருத்தவும், பழுதடைந்த சிசிடிவிக்களை சரி செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

The post அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகள், பெண் பேராசிரியர்கள் நலனுக்காக 16 பேர் கொண்ட குழு அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,for the Benefit of Students and ,Professors ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு...