- விழுப்புரம்
- பெருந்திட்டா தொகுதி ஊராட்சி
- வில்லுபுரம் கலெக்டரேட்
- பெருந்திட்டா
- சிக்கலான
- சூறாவளி
- பெருந்திடா காம்ப்ளக்ஸ்
- பென்ஜால் சூறாவளி
- வில்லுபுரம் ஊராட்சி பெருந்திட்டா வளாகம்
- தின மலர்
*ஓரிரு நாட்களில் பயன்பாட்டுக்கு வரும்
விழுப்புரம் : விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நகராட்சி பூங்கா பெஞ்சல் புயலினால் தண்ணீர் தேங்கி சேதம் அடைந்த நிலையில் அதனை வெளியேற்றி நகராட்சி ஊழியர்கள் சீரமைத்து வருகின்றனர்.
இந்தப் பணிகள் முடிவடைந்து இன்னும் ஓரிரு நாட்களுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் 30ம் தேதி பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத மழைபெய்தது. சாலைகள், ஏரி, குளங்கள் பல இடங்களில் சேதமடைந்தன. இந்தபகுதிகளில் ஆய்வு செய்து தற்போது சீரமைப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நகராட்சி பூங்கா பெஞ்சல் புயல் காரணமாக தண்ணீர் தேங்கி சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. தற்போது இந்த நகராட்சி பூங்காவில் சீரமைப்பு பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி மோட்டார் மூலம் பூங்காவில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டும், முட்செடிகள் அகற்றப்பட்டும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதைகளையும், சிறுவர்கள் விளையாட்டு திடல் பகுதிகளிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைந்து இன்னும் ஓரிரு தினங்களுக்குள் நகராட்சி பூங்கா பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது.
The post விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் பெஞ்சல் புயலில் சேதமடைந்த நகராட்சி பூங்கா சீரமைக்கும் பணி ஜரூர் appeared first on Dinakaran.