- திருச்சி எஸ்.பி.
- சீமான்
- திருச்சி
- திருச்சி மாவட்டம்
- சமாஜ்வாடி
- வருங்குமார்
- நாம் தமிழ் கட்சி
- திருச்சி 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம்
- தின மலர்
திருச்சி: திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார், திருச்சி 4 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தனிப்பட்ட புகார் (பிரைவேட் கம்ப்ளைன்ட்) கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், சீமான் என்னையும், எனது குடும்பத்தினரையும் பல்வேறு பேட்டிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வருகிறார். இதனால் நான் உள்பட எனது குடும்பத்தினர் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளோம். இவ்வாறு அவதூறு தகவல்களை பேசி வரும் சீமான் ரூ.2 கோடி நஷ்ட ஈடாக தரவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து எஸ்பி வருண்குமாரின் வக்கீல் முரளிகிருஷ்ணன் கூறுகையில், எஸ்பி வருண்குமார் அளித்த இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. மனுவை பரிசீலனை செய்த கோர்ட் விசாரணைக்கு எடுத்து கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. சீமான் பேட்டியளித்த அனைத்தும் ஆவணமாக்கப்பட்டும், காணொலியாகவும் மற்றும் தொடர்புடைய ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து வழக்கு தொடர்பான விவரங்கள் சீமானுக்கு விரைவில் அனுப்பப்பட்டு, அவரை கோர்ட்டில் ஆஜராக கோர்ட் அழைப்பாணை பிறப்பிக்கும். எஸ்பி வருண்குமாரும், கோர்ட் உத்தரவின்பேரில் வழக்கு விசாரணையில் ஆஜராவார். தொடர்ந்து கோர்ட் வழிகாட்டுதல்படி வழக்கு விசாரணை நடைபெறும் என்றார்.
The post திருச்சி எஸ்பி தொடர்ந்த சீமான் மீதான அவதூறு வழக்கு: நீதிமன்ற விசாரணைக்கு ஏற்பு appeared first on Dinakaran.