- அண்ணா பல்கலைக்கழகம்
- அஇஅதிமுக
- சென்னை
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- முன்னாள்
- டாக்டர்
- மன்மோகன் சிங்...
- தின மலர்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியைக் கண்டித்து அதிமுக சார்பில் நேற்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான தேதி மாற்றப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் காலமானதை ஒட்டி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டங்கள் வரும் 30ம்தேதி திங்கட்கிழமை காலை 10 மணி அளில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்கள் நீங்கலாக, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும், மக்கள் அதிகம் கூடும் கட்சி அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post அண்ணா பல்கலை மாணவி விவகாரம் அதிமுக சார்பில் 30ம்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.