×

லாட்டரி விற்ற பெண் கைது

 

ஈரோடு,டிச.27:தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சித்தோடு போலீசார் தங்களது காவல் நிலைக்குட்பட்ட ஆனைக்காடு,மாரியம்மன் கோவில் அருகில் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமாக நடமாடிய பெண் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர் காலிங்கராயன்பாளையம், வாய்க்கால் வீதியைச் சேர்ந்த தனலட்சுமி (54) என்பதும் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளின் எண்கள் எழுதப்பட்ட வெள்ளை தாள் மற்றும் ஒரு செல்போன்,ரூ.300 ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவர் அளித்த தகவலின்பேரில் லாட்டரி விற்பனையில் தொடர்புடைய தனசண்முகமணி, மகாதேவன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

The post லாட்டரி விற்ற பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Tamil Nadu government ,Siddhud ,Anaikadu ,Mariamman Temple ,
× RELATED அடையாளம் தெரியாத ஆண் சாவு