- ஈரோடு
- ஈரோடு கலெக்டர்
- பனங்காட்டூர் காலனி
- கண்ணப்பள்ளி
- அந்தியூர் தாலுகா
- கலெக்டர்
- ராஜகோபால் சுங்கரா
- தின மலர்
ஈரோடு, டிச.24: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், அந்தியூர் தாலுகா கன்னப்பள்ளி அருகே பனங்காட்டூர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: எங்களது காலனியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். 30 ஆண்டுகளுக்கு மேலாக அதே இடத்தில் வசித்து, கூலி வேலை செய்து வருகிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக மலைப்பகுதி உட்பட கிராமப்புறங்களில் தெருக்களுக்கும், வீடுகளுக்கும் குடிநீர் பைப்லைன் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்களாக வசிக்கும் எங்கள் பகுதியில் குடிநீர் இணைப்பு இல்லாததால், வெகுதூரம் சென்றும், குறைந்த அளவே தண்ணீர் எடுத்து வருவதாலும் சிரமப்படுகிறோம். இதனால் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது. எனவே, எங்கள் காலனிக்கும், அங்குள்ள வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
The post குடிநீர் இணைப்பு வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.