×

ஈரோட்டில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா

 

ஈரோடு, டிச.25: ஈரோடு பெரியார் நகரில் உள்ள அமைச்சர் முகாம் அலுவலகத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிறிஸ்துவ சமூக நீதிப்பேரவை சார்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சாதிக் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று, சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவை கேக் வெட்டி, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின விழா மற்றும் ஆங்கில புத்தாண்டுக்கான வாழ்த்துகளை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், கிறிஸ்துவ சமூக நீதி பேரவையின் மாநில துணை செயலாளர் ஆல்ட்ரின் ராஜேஷ் குமார், சிஎஸ்ஐ பிரப் திருச்சபையின் பேராயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன், ஆயர் இளவரசு, ஆயர் பிரிண்ஸ், சிஎஸ்ஐ நிர்வாகிகள் செழியன் பிரபு, விசிக தெற்கு மாவட்ட செயலாளர் கமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஈரோட்டில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா appeared first on Dinakaran.

Tags : Equality Christmas Festival ,Erode ,Minister's Camp Office ,Periyar Nagar, ,Christian Social Justice Council of the Liberation Tigers of Tamil Nadu ,District Secretary ,Sadik ,
× RELATED திருச்செங்கோட்டில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா