×

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 40 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

 

ஈரோடு, டிச. 24: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வெளியூர்களுக்கு 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், ஈரோடு மண்டலம் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக ஈரோட்டிலிருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர், ராமேஸ்வரம், பழனி, திருநெல்வேலி, நாகர்கோயில், தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு கூடுதலாக 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 40 சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Christmas ,Erode ,State Transport Corporation ,Zone ,General Manager ,Tamil Nadu State Transport Corporation ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!!