×

அடையாளம் தெரியாத ஆண் சாவு

 

ஈரோடு,டிச.27:ஈரோடு ரயில் நிலையத்தில் பூங்கா பகுதியில் கடந்த 16ம் தேதி மயக்கமான நிலையில் இருந்த நபரை, அங்கிருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 17ம் தேதி உயிரிழந்தார்.ஆனால், அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. அவருக்கு சுமார் 50 வயது இருக்கும். இதுகுறித்து ஈரோடு கிராம நிர்வாக அலுவலர் நிவேதா அளித்த புகாரின் பேரில்,ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post அடையாளம் தெரியாத ஆண் சாவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode railway station ,Erode Government Hospital ,Dinakaran ,
× RELATED ஆண் சடலம் மீட்பு