×

15வது ஊதிய ஒப்பந்தம் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆக.27ம் தேதி சென்னை குரோம்பேடையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்கட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு இல்லை என்பதால், மீண்டும் 2 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்த அரசு திட்டமிடப்பட்டது. அதன்படி, இன்றும், நாளையும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று தொமுச, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎப், ஐஎன்டியுசி உள்ளிட்ட சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகளும், அடுத்த நாளில் இதர சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

The post 15வது ஊதிய ஒப்பந்தம் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Transport Corporation ,Chromepet, Chennai ,Dinakaran ,
× RELATED வரும் 21ம் தேதி முதல் மூத்த...