அண்ணாநகர்: கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிலோ மல்லி 2,700 ரூபாயிலிருந்து 1,800க்கும், ஐஸ் மல்லி 2,500ல் இருந்து ரூ.1,500க்கும், முல்லை ரூ.900க்கும், ஜாதி மல்லி ரூ.700ல் இருந்து ரூ.600க்கும் கனகாம்பரம் ரூ.1000த்தில் இருந்து ரூ.800க்கும், சாமந்தி ரூ.100ல் இருந்து ரூ.80க்கும், சம்பங்கி ரூ.100க்கும், அரளி ரூ.400ல் இருந்து ரூ.200க்கும், பன்னீர்ரோஸ் ரூ.120ல் இருந்து ரூ.100க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.180ல் இருந்து ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்தது. விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை சற்று குறைந்துள்ளது. வரும் 31ம் தேதி முகூர்த்த நாள் என்பதால் மீண்டும் அனைத்து பூக்களின் விலை உயரும்’ என்றார்.
The post விசேஷ நாட்கள் இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை சற்று குறைவு appeared first on Dinakaran.