×

ஒட்டுப்பிச்சை எடுப்பதற்காக இப்படி தன்னைத்தானே சாட்டையில் அடித்துக்கொண்டார் அண்ணாமலை: வன்னி அரசு

சென்னை: ஒட்டுப்பிச்சை எடுப்பதற்காக இப்படி தன்னைத்தானே சாட்டையில் அடித்துக்கொண்டார் அண்ணாமலை என வி.சி.க. துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு விமர்சித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவர், இரு தினங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தை நடத்துவதாகக் அண்ணாமலை கூறியிருந்தார். அதன்படி, காலை 10 மணியளவில் கோயம்புத்தூரில் உள்ள அவரின் வீட்டுக்கு முன்னே நின்று தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஒட்டுப்பிச்சை எடுப்பதற்காக தன்னைத்தானே சாட்டையில் அடித்துக்கொண்டார் அண்ணாமலை என வி.சி.க. துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு விமர்சனம் செய்துள்ளார். மனிதனை மனிதன் கை ரிக்ஷா கொண்டு இழுக்கக்கூடாது என அவற்றுக்கு தடை விதித்தவர் கலைஞர். சாட்டையால் அடித்து பிச்சை எடுப்பவர்களை தடுத்து மறுவாழ்வுக்கான வழிகாட்டியவர். தமிழ்நாட்டில் இப்படி சாட்டையால் அடித்து பிச்சை எடுப்பதை காண்பது அரிது. பாஜக மாநில தலைவர் ஒட்டுப்பிச்சை எடுப்பதற்காக இப்படி தன்னைத்தானே அடித்து கழிவிரக்கத்தை தேடுகிறார். அண்ணாமலையின் செயல்பாடு அநாகரீகமானது. இப்படி செய்பவர்கள் மனநலம் பாதித்தவராக இருக்க வேண்டும். இதில் பாஜகவும் அண்ணாமலையும் என்ன ரகம் என்பதை மக்களே புரிந்து கொள்ளட்டும். என்றும் தெரிவித்தார்.

 

The post ஒட்டுப்பிச்சை எடுப்பதற்காக இப்படி தன்னைத்தானே சாட்டையில் அடித்துக்கொண்டார் அண்ணாமலை: வன்னி அரசு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Vanni government ,Chennai ,V.C.K. ,Deputy General Secretary ,Anna University ,Vanni ,
× RELATED ஓட்டுக்காக சாட்டையில் அடித்துக்கொண்டார் அண்ணாமலை: வன்னி அரசு விமர்சனம்