- காந்தி காய்கறி சந்தை
- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டானாஸ்திரா
- வேரியாபுர்
- வடகாடு
- வண்டி
- பெத்தேல்புரம்
- அடிகோம்பாய்
- ஓட்டனாஸ்ரம்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் பீட்ரூட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. நகரின் சுற்றுவட்டாரத்தில் உள்ள வெரியப்பூர், வடகாடு, வண்டிப்பாதை, பெத்தேல்புரம், அத்திக்கோம்பை, ஜவ்வாதுபட்டி, இடையகோட்டை, பெரியகோட்டை, சத்திரப்பட்டி, விருப்பாட்சி, 16 புதூர், போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், கொத்தயம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வெண்டை, பாகற்காய், தக்காளி, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் ஒட்டன்சத்திரத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரள மாநிலத்திற்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.
இதன்படி, விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பீட்ரூட்டை மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் வரத்து அதிகமாக இருந்ததால் விலை சரிந்து கிலோ ரூ.16க்கு விற்பனையானது. இந்நிலையில், தொடர் மழை மற்றும் கடும் பனிப்பொழிவால் பீட்ரூட் விளைச்சல் பாதிக்கப்பட்டு தற்போது மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்துள்ளது. இதனால், பீட்ரூட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.43க்கு விற்பனையாகிறது. கொள்முதல் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவால் பீட்ரூட் விலை கிடுகிடு: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.