இந்த நிலையில், கடத்த 2 ஆண்டுகளாக மூணாறில் பனிப்பொழிவு குறைந்து காணப்பட்ட நிலையில், நடப்பாண்டு தட்பவெப்ப நிலை மைனஸ் 2 டிகிரியை தொட்டுள்ளது. பல்வேறு இடங்களில் புல்வெளிகளில் பனி துகள்கள் படிந்துள்ளதுடன், ஏறி உள்ளிட்ட நீர்நிலைகளில் பனியின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. கன்னி மலை, பேபி குளம், அருவி காடு உள்ளிட்ட இடங்களில் குளிர் நிலவுகிறது. இந்த இதமான சூழலை சுற்றுலா பயணிகள் அனுபவித்து வருகின்றனர். மூணாறில் நிலவும் இதமான சூழலையும், அதன் அழகையும் ரசிக்க சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post 2 ஆண்டுகளுக்கு பிறகு மைனஸ் 2 டிகிரிக்கு சென்ற தட்பவெப்பநிலை: மூணாறின் அழகைக் கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள் appeared first on Dinakaran.