ரசிகர்களை கட்டுப்படுத்துவது பிரபலங்களின் பொறுப்பு: தெலுங்கு திரையுலகினரிடம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டிப்பு

திருமலை: ஐதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தெலுங்கு திரையுலகினர் நேற்று நேரில் சந்தித்து பேசினார். தெலுங்கு திரைப்பட வளர்ச்சிக் கழக தலைவர் தில்ராஜூ, நடிகர்கள் நாகார்ஜூனா, வெங்கடேஷ், முரளி மோகன், நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

பின்னர் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசுகையில், டோலிவுட்டை அரசு முழுமையாக ஆதரிக்கும். புஷ்பா-2 படத்தின் போது சந்தியா தியேட்டர் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். ஒரு பெண் உயிர் இழந்ததால் இந்த சம்பவத்தை தனது அரசு தீவிரமாக எடுத்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு விஷயத்தில் சமரசம் இல்லை. இனிமேல் பவுன்சர்கள் விஷயத்தில் அரசு தீவிரமாக இருக்கும். ரசிகர்களை கட்டுப்படுத்துவது பிரபலங்களின் பொறுப்பு. திரைப்படத்துறையுடன் அரசு துணையாக இருக்கும் இவ்வாறு அவர் பேசினார்.

The post ரசிகர்களை கட்டுப்படுத்துவது பிரபலங்களின் பொறுப்பு: தெலுங்கு திரையுலகினரிடம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: