தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியது. இதனால் எம்பிசி அலுவலக பகுதி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் திருமலையில் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. அதனை பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரண்டனர். இவர்கள் சுமார் 20 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர். ஆனால் ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post ஏழுமலையான் கோயிலில் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.