ஜெகன்மோகன் ஆட்சியின்போது சந்திரபாபு நாயுடுவை கைது செய்த சிஐடி தலைவர் மீது ஊழல் வழக்கு

திருமலை: ஆந்திராவில் கடந்த 2014 முதல் 2019 இடையே ஆட்சியில் இருந்தபோது திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதாக கூறி ஊழல் செய்ததாக சந்திரபாபு நாயுடுவை ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது ஆந்திர சிஐடி தலைவராக இருந்த சஞ்சய் கைது செய்து சிறையில் அடைத்தார். இதில் 50 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், வெளிவந்து பின்னர் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

இந்நிலையில் 1993ம் ஆண்டின் ஐ.பி.எஸ். அதிகாரி பேட்ச்சை சேர்ந்த சஞ்சய் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிஐடி போலீசில் ₹2 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக விஜிலென்ஸ் மற்றும் அமலாக்கத் துறை அறிக்கை அளித்தது. இதையடுத்து, நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி சஞ்சய்யை மாநில அரசு கடந்த 4ம் தேதி சந்திரபாபு அரசு சஸ்பெண்ட் செய்தது. இந்நிலையில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் மீது நேற்று ஊழல் வழக்குப்பதிவு செய்தது.

The post ஜெகன்மோகன் ஆட்சியின்போது சந்திரபாபு நாயுடுவை கைது செய்த சிஐடி தலைவர் மீது ஊழல் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: