×

டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

புதுடெல்லி: மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர உள்ளது. இதுதொடர்பான இரண்டு மசோதாக்கள் கடந்த வாரம் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரண்டு மசோதாக்களும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வரும் ஜனவரி 8ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக்குழு கூடி, ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தேசிய ஜனநாயக கட்சி தலைவர்கள் பாஜ தலைவர் ஜே.பி.நட்டா வீட்டில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ஜேடி-யு தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ராஜீவ் ரஞ்சன் சிங், அப்னா தளம்(எஸ்) தலைவரும், ஒன்றிய அமைச்சருமான அனுப்ரியா படேல், மதசார்பற்ற ஜனதள தள தலைவரும், ஒன்றிய அமைச்சருமான எச்.டி.குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

The post டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : National Democratic Alliance ,Delhi ,New Delhi ,Union Government ,Modi ,House of Commons ,
× RELATED பாஜ கூட்டணியில் தேசிய மாநாடு சேராது