மேலும் இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின்கீழ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் நோக்கம் சாலை விபத்துகளில் உள்ளானவர்களை உடனடியாக மீட்டு காப்பாற்றுவது. இந்த திட்டத்தின்படி விபத்துகள் நேர்ந்து முதல் 48 மணி நேரத்தில் அவர்களை சேர்ப்பவர்களுக்கு ₹5,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவிலான விபத்துகளிலிருந்து மக்களை மீட்டெடுத்திருக்கிறது.
அந்த வகையில் ₹1 லட்சம் என்று தொடங்கி இதுவரை, இந்த திட்டம் தொடங்கியதற்கு பிறகு 3,20,264 பேர் விபத்துகளில் இருந்து மீட்டெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்காக அரசு இந்த திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ள தொகை ₹ 280 கோடி. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 721 மருத்துவமனைகளில் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த 721 மருத்துவமனைகளிலும் இந்த திட்டம் ₹1 லட்சம் என்கின்ற அளவில் செயல்பட்டுகொண்டிருக்கிறது அது ₹2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் அருண்தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டம் இணை இயக்குநர் ரவிபாபு மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர்கள், மருத்துவப் பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 திட்டம் மூலம் 3,20,264 பேர் விபத்துகளில் இருந்து மீட்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.