×

திருச்செங்கோட்டில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா

திருச்செங்கோடு, டிச.24: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், திருச்செங்கோடு தனியார் பள்ளியில் சமத்துவ நல்லுறவு கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேலம் மறை மாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயன் தலைமை வகித்தார். தமிழக ஆயர் பேரவை தலைவரும், மத நல்லிணக்கம் மற்றும் பல் சமய உரையாடல் பணிக்குழுவை சேர்ந்த ஆயா லாரன்ஸ் பையர்ஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ராஜயோக தியான மையப் பொறுப்பாளர் ஜெயந்தி, நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மாவட்ட தலைவர் மவுலி முகம்மது அலி, நாமக்கல் மறை மாவட்ட முதன்மை குரு மைக்கேல்ராஜ் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திருச்செங்கோட்டில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா appeared first on Dinakaran.

Tags : Equality Christmas Festival ,Trichenkot ,Trichengode ,Christmas Ceremony of Equality ,Trichengod ,Salem Makhar District ,President ,Tamil Nadu Pastoral Council ,Religious Harmony ,
× RELATED ஈரோட்டில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா