ஊக்க மருந்து குற்றச்சாட்டு: டென்னிஸ் வீரருக்கு 2 ஆண்டு தடை; ஐடிஐஏ அறிவிப்பு

புதுடெல்லி: ரஷ்ய டென்னிஸ் வீரர் டேனியில் சாவலெவ் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு 2 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் சாவலெவ் (23). கடந்த 2022 ஆகஸ்டில் சர்வதேச ஆண்கள் இரட்டையர் பிரிவில் அதிகபட்சமாக 1486 புள்ளிகள் பெற்றிருந்தார்.

கடந்த ஜூலையில் சாவலெவ் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரியை சோதனை செய்து பார்த்தபோது அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தான மெல்டோனியம் உட்கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை இரு ஆண்டுகள் டென்னிஸ் போட்டிகளில் இருந்து தடை செய்வதாக சர்வதேச டென்னிஸ் கண்காணிப்பு அமைப்பு (ஐடிஐஏ) அறிவித்துள்ளது.

The post ஊக்க மருந்து குற்றச்சாட்டு: டென்னிஸ் வீரருக்கு 2 ஆண்டு தடை; ஐடிஐஏ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: