அல் அயின்: ஆசிய அமெச்சூர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையை சேர்ந்த வீராங்கனை சனந்தா 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்சின் அல் அயின் நகரில் கடந்த 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை அமெச்சூர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன.
மூன்று பிரிவுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த செஸ் வீராங்கனை சனந்தா மூன்றிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். 9 சுற்றுகள் கொண்ட போட்டியின் கடைசி சுற்றில் ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த மரியம் முகம்மதை வென்ற சனந்தா 7.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். அவருக்கு தங்கப் பதக்கங்களும், ரூ. 1.25 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.
The post அமெச்சூர் செஸ் சாம்பியன்ஷிப்: 3 தங்கம் வென்ற சென்னை வீராங்கனை appeared first on Dinakaran.