- செனட்
- டிரம்ப்
- லாரா
- வாஷிங்டன்
- குடியரசுக்
- டொனால்டு டிரம்ப்
- எங்களுக்கு
- தேர்தல்
- மாநில செயலாளர்
- தின மலர்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் தனது பொறுப்பை ஏற்க உள்ளார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற உடன் டொனால்ட் டிரம்ப் தனது புதிய நிர்வாகத்துக்கான வெளியுறவு அமைச்சராக மார்கோ ரூபிபியோவை நியமித்துள்ளார். மார்கோ ரூபியோ புளோரிடாவில் இருந்து செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.மார்கோ ரூபியோ வெளியுறவு அமைச்சரானால் காலியாக உள்ள செனட் உறுப்பினர் பதவிக்கு டிரம்பின் மருமகளான லாரா டிரம்ப் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வந்தன.
இந்த நிலையில், டிரம்பின் மருமகள் லாரா டிரம்ப் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடுகையில், அமெரிக்க செனட் சபை உறுப்பினர் பதவிக்கான பரிசீலனையில் இருந்து எனது பெயரை விலக்க முடிவு செய்துள்ளேன். எனினும் வரும் ஜனவரி மாதம் மிக பெரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்பதை இந்த நேரத்தில் உறுதியளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்நிலை யில், டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் மார்க் பர்னெட்டை இங்கிலாந்துக்கான சிறப்பு துாதராக டிரம்ப் நியமித்துள்ளார்.
The post செனட் பதவியில் விருப்பம் இல்லை: டிரம்ப் மருமகள் லாரா அறிவிப்பு appeared first on Dinakaran.