×

ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள சிரியா அதிபர் அல்ஆசாத்திடம் விவாகரத்து கேட்கும் மனைவி

மாஸ்கோ: சிரியா நாட்டின் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிப் படையினர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அதிபர் மாளிகையைக் கைப்பற்றி, அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத்தின் 24 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தன. அதற்கு முன்னதாக அதிபர் பஷார் அல் ஆசாத், நாட்டை விட்டு தப்பியோடி ரஷ்யாவில் தஞ்மடைந்தார். தற்போது அவர் தனது மனைவி அஸ்மா அல் ஆசாத் மற்றும் குடும்பத்தினருடன் ரஷ்யாவில் தங்கியுள்ளார். இந்நிலையில் சவூதி மற்றும் துருக்கிய ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகளின்படி, மனைவி அஸ்மா அல் ஆசாத், ரஷ்யாவில் இருந்து வெளியேறி லண்டனுக்கு செல்ல விரும்புகிறார். அதனால் தனது கணவர் பஷார் அல் ஆசாத்திடம் இருந்து விவாகரத்து கோரி லண்டனில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்காக மாஸ்கோவை விட்டு வெளியேற சிறப்பு அனுமதி கோரியுள்ளார். அவரது விண்ணப்பம் ரஷ்ய அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து மற்றும் சிரியா நாட்டின் குடியுரிமை பெற்ற அஸ்மா அல் ஆசாத், லண்டனில் வசித்த சிரியாவை சேர்ந்த தம்பதிக்கு பிறந்தார்.

The post ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள சிரியா அதிபர் அல்ஆசாத்திடம் விவாகரத்து கேட்கும் மனைவி appeared first on Dinakaran.

Tags : President Bashar al-Assad ,Russia ,Moscow ,Hayat Tahrir al-Sham ,Damascus ,
× RELATED உள்நாட்டுப்போர் வெடித்தது...