×

புயல் மழை மற்றும் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு – நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கடலூர்: புயல் மழை மற்றும் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு – நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும் என கடலூரில் நடைப்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். புயல் மழை மற்றும் சாத்தனூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரினால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, கடலூர் மாவட்டத்தில், கடலூர் மாநகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு, கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டி, கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்,04-12-2024,புதன் கிழமை, மாலை 4 மணியளவில், கடலூர் மாநகர கழக அலுவலகத்தில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, கழக நிர்வாகிகள் உடனடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு , தேவையான நிவாரண உதவிகள் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கழக நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் , கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் , எம்.ஆர்.கே.பி.கதிரவன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகர கழக செயலாளர் கே.எஸ்.ராஜா, ஒன்றிய கழகச் செயலாளர்கள் அ.முத்துசாமி, வி.சிவக்குமார், தங்க.ஆனந்தன், கே.ஆர்.தனஞ்செயன், விஜயசுந்தரம், ஏ.எஸ்.மதியழகன், கே.ஆர்.ராயர், பி.சுப்ரமணியன், த.சங்கர், வி.ஆர்.ராஜேந்திரகுமார்,

பொதுக்குழு கே.பி.ஆர்.பாலமுருகன், ஜேம்ஸ் விஜயராகவன், கோதண்டபாணி,தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானசேகர், பகுதி செயலாளர்கள் எஸ்.பி.நடராஜன்,எஸ்.சலீம் இளையராஜா, வடலூர் நகர கழக செயலாளர் த.தமிழ்செல்வன், நகரமன்ற தலைவர் சு.சிவக்குமார், பேரூராட்சி செயலாளர்கள் க.பழனி,எஸ்.கணேசமூர்த்தி, பேரூராட்சி தலைவர்கள் கோகிலா குமார், தேன்மொழி சங்கர், ஒன்றிய துணை செயலாளர் கடலூர் கிழக்குபாவாடைதுரை, கம்மாபுரம் வடக்குகணேசன், சிதம்பரம்நகர துணை செயலாளர் பாலு சார்பு அணி நிர்வாகிகள் போக்குவரத்து தொமுச பழனி, இளைஞரணி பொறியாளர் அணி அப்பு.சந்திரசேகரன், தகவல் தொழில்நுட்ப அணி ஜாபர்அலி, மாணவர் அணி ஆர்.சத்தியநாராயணன்,

துணை அமைப்பாளர்கள் ஏ.எம்.மதியழகன், வி .ஜே. மணிகண்டன் தொண்டர் அணி ஆராமுது, வழக்கறிஞர் அணி பி.அருள்ஜோதி,மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் முகமது யூனஸ், மாவட்ட ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் ஆர்.பரந்தாமன், விவசாய அணி பொன்.பன்னீர்செல்வம், மண்டல குழுதலைவர்கள் பிரசன்னா, சங்கீதா, சங்கீதா செந்தில்முருகன், மாமன்ற உறுப்பினர்கள் கீதா குணசேகரன், பிரகாஷ், பார்வதி, சுமதி ரங்கநாதன்,ராஜூமுருகன், ஆராமுதன், விஜி, இளந்திரையன்,அகஸ்டின் பிராபகரன்,சுதா அரங்கநாதன்,ஜெயசீலன், பரூக்அலி,ராதிகா,கீர்த்தனா அப்பு,பாலசுந்தர்,சக்திவேல் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் ,மாநகர ஒன்றிய, நகர ,பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post புயல் மழை மற்றும் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு – நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Tags : Minister ,M.R.K. Panneerselvam ,Cuddalore ,Dinakaran ,
× RELATED ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள...