×

நடிகை நயன்தாராவுக்கு பணத் திமிர் வந்துவிட்டது: பாடகி சுசித்ரா கடும் தாக்கு


சென்னை: சமீபத்தில் நயன்தாரா யூடியூபிற்கு பேட்டி அளித்தார். அது தொடர்பாக பாடகியும் நடிகையுமான சுசித்ரா கூறியிருப்பதாவது: நயன்தாரா, தனுஷ் குறித்து வெளியிட்டு இருந்த அறிக்கையை நான் ரொம்ப பாராட்டி பேசியிருந்தேன். தனுஷ் மேல என்னென்ன குற்றச்சாட்டு இருக்கோ அது அனைத்தையும், அந்த அறிக்கையில் நயன்தாரா சொல்லி இருந்தார். அதனால் நான் அதை பாராட்டி இருந்தேன். மற்றபடி இந்த வழக்கு பற்றி பேச வேண்டும் என்றால், இது இரண்டு பணக்காரர்கள் மோதி கொள்கிறார்கள். இருவருக்குமே பத்து கோடி என்பது டிப்ஸ் கொடுப்பது போல சாதாரணமான விஷயம் தான்.

அப்படியே பணம் அவங்க வீட்ல கொட்டி கிடக்கிறதுனால, ரெண்டு பேருக்குமே அகங்காரம் இருக்கு. தனுஷுக்கு அகங்காரம் இல்லைன்னு நம்ம சொல்லவே முடியாது. அதேபோல நயன்தாராவுக்கும் அந்த அகங்காரம் இருக்கிறது என்பதை அண்மையில் அளித்த பேட்டியில் தான் வெளிப்பட்டு உள்ளது. தமிழ் சேனல்களுக்கு அவர் அளித்த பேட்டியில் எப்போதுமே நயன்தாரா பவ்யமாக தான் பேசுவார். ஆனால், இந்த யூடியூப் பேட்டியில் அங்கே போய் உங்காந்துக்கிட்டு, நான் நடிச்ச தமிழ் படத்தை ரசிகர்கள் பார்த்ததை விட, என்னுடைய டாக்குமெண்டரியைத்தான் அதிகம் பேர் பார்த்தார்கள் என்று சொல்லி இருக்கிறார்.

இது நயன்தாராவிற்கு எவ்வளவு அகங்காரம் இருக்கும் என்பதைத்தான் காட்டுகிறது. பாலிவுட்டில் இருக்கும் அனுபமா சோப்ரா, ரொம்ப பிரபலமானவர் என்பதால், அவர், நயன்தாராவை பேட்டி எடுத்து இருக்காங்க, அனுபமா சோப்ரா கடந்த ரெண்டு வருஷமா எல்லா பிரபலங்களுக்கும் சொம்பு தூக்குறதைத்தான் வேலையாகவே வச்சிருக்காங்க. இப்படி சொம்பு தூக்கும் அந்த அனுபமா சோப்ரா, நயன்தாராவை அந்த பேட்டியில் அப்படி புகழ்ந்து பேசி இருக்காங்க, இதற்காக அவங்க நிறைய பணம் வாங்கி இருப்பாங்க. இந்த இன்டர்வியூ மூலமாக நயன்தாரா ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்க பாத்திருக்காங்க. ஒன்னு தனுசுக்கு எதிராக தான் இருப்பதை பற்றி தெளிவாக சொல்லிவிட்டார். ஜவான் படத்திற்கு பிறகு நயன்தாராவிற்கு பாலிவுட்டில் படவாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் வராததால், இதன் மூலம் பாலிவுட்டில் வாய்ப்பும் கேட்டுவிட்டார்.

அதுமட்டுமல்லாமல், நயன்தாரா மூன்று குரங்குகள் என்று பேசி பணம் சம்பாதித்து வருவதாக சொல்லி இருக்கிறார். அவர்கள் இதற்கு முன்பெல்லாம் நயன்தாராவை பற்றி நிறைய நல்ல விஷயங்களை எல்லாம் சொல்லி இருக்கிறார்கள், ஆனால் இப்போது அவர் சர்ச்சை நாயகியாக மாறிவிட்டதால், அவரை பற்றி சொல்லவேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது, இவரை இப்படி விமர்சிப்பது சரியில்லை. அவங்க குரங்கு இல்ல, நயன்தாரா தான் சொகுசு பூனைப்போல இருக்கிறார். இவ்வாறு சுசித்ரா கூறியுள்ளார்.

The post நடிகை நயன்தாராவுக்கு பணத் திமிர் வந்துவிட்டது: பாடகி சுசித்ரா கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Nayanthara ,Suchitra ,Chennai ,YouTube ,Dhanush ,
× RELATED விக்னேஷ் சிவனை திருமணம் செய்திருக்க கூடாது: நயன்தாரா வேதனை