×

அடுத்த வாரம் கிறிஸ்துமஸ் வரும் நிலையில் ஒடுகத்தூர் சந்தையில் ஆடு வியாபாரம் மந்தம்


ஒடுகத்தூர்: அடுத்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகை வர உள்ள நிலையில் ஒடுகத்தூர் சந்தையில் இன்று ஆடு வியாபாரம் மந்தமாக காணப்பட்டது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். இந்த சந்தையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூடுவர். இதனால் வாரந்தோறும் ₹10 லட்சம் முதல் ₹20 லட்சம் வரை வர்த்தகம் நடக்கும். கடந்த வாரம் தொடர் மழை காரணமாக 50 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் வரும் 25ம்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வர உள்ளதால் இன்று பெரும் எதிர்பார்ப்புடன் சந்தை கூடியது. ஆனால் கடந்த வாரம் போலவே இந்த வாரமும் குறைந்த எண்ணிக்கையில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால் வியாபாரமும் மந்தமாக காணப்பட்டது. காலை 9 மணி நிலவரப்படி ₹4 லட்சத்திற்கு மட்டுமே வர்த்தகம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு வரும் 23 அல்லது 24ம் தேதிகளில் சிறப்பு ஆட்டுச்சந்தை நடத்தப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post அடுத்த வாரம் கிறிஸ்துமஸ் வரும் நிலையில் ஒடுகத்தூர் சந்தையில் ஆடு வியாபாரம் மந்தம் appeared first on Dinakaran.

Tags : Odugathur ,Christmas ,Odugathur, ,Vellore district ,Dinakaran ,
× RELATED வேன் டிரைவர் அடித்துக்கொலை...