×

மணிப்பூர் கலவரம்.. வாய்திறக்க மறுக்கிறார் மோடி; அவையில் அவதூறு பேசுகின்றனர்: திருச்சி சிவா எம்.பி. கேள்வி!

டெல்லி: மணிப்பூர் மாநிலத்துக்கு பிரதமர் மோடி செல்லாதது ஏன்? என்று திருச்சி சிவா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் திருச்சி சிவா எம்.பி. செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; மணிப்பூர் மாநிலத்தில் ஓராண்டுக்கும் மேலாக கலவரம் நடக்கிறது. ஆனால் மணிப்பூர் மாநிலத்துக்கு பிரதமர் மோடி செல்லாதது ஏன்? என கேள்வி எழுப்பினார். மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு விளக்கம் அளிக்கவில்லை. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரு பிரிவினர் இடையேயான மோதல் குறித்து பேச மறுக்கின்றனர்.

கார்கே, சோனியா, ராகுல்காந்தி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவையில் கூறுகின்றனர். அம்பேத்கர் பெயரை உச்சரித்தால் ஒன்றும் கிடைக்காது என அமித் ஷா கூறியது அவமதிப்பு. நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் பற்றி அமித் ஷா பேசியது பலரது மனதை புண்படுத்திவிட்டது. அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்கு அமித் ஷா வருத்தம் தெரிவிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பு தருவதில்லை என திருச்சி சிவா எம்.பி. குற்றச்சாட்டியுள்ளார்.

The post மணிப்பூர் கலவரம்.. வாய்திறக்க மறுக்கிறார் மோடி; அவையில் அவதூறு பேசுகின்றனர்: திருச்சி சிவா எம்.பி. கேள்வி! appeared first on Dinakaran.

Tags : Manipur riots ,Modi ,House ,Trichy Siva ,Delhi ,Manipur ,Prime Minister… ,Trichy Siva MP ,
× RELATED மக்களவையில் இருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!