புதுச்சேரி: புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்குப் பின் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி நகரப் பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஏசி வசதியுடன் கூடிய பேருந்துகளில் குறைந்தபட்ச -கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.13 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஏசி வசதியில்லாத பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.13-ல் இருந்து ரூ.17ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி அறிவிப்பை போக்குவரத்து கூடுதல் செயலர் வெளியிட்டார்.
The post புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்குப் பின் பேருந்துக் கட்டணம் உயர்வு appeared first on Dinakaran.