×

பல புரட்சிகரமான தொடக்கம் விளைந்தது ஈரோட்டு மண்ணில்தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

ஈரோடு: பல புரட்சிகரமான தொடக்கம் விளைந்தது ஈரோட்டு மண்ணில்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாடு மட்டுமல்ல கேரள மக்களும் பாராட்டுகின்றனர். ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கில் 400 மீட்டர் சின்தடிக் ஓடுதளபாதையுடன் கூடிய கால்பந்து மைதானம் புனரமைக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் விரைவில் ஐ.டி. பார்க் அமைக்கப்படும். அந்தியூர், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறையில் ரூ.100 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

The post பல புரட்சிகரமான தொடக்கம் விளைந்தது ஈரோட்டு மண்ணில்தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Erode ,Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu ,Kerala ,Erode District Sports Stadium… ,
× RELATED முதல்வர் வருகையையொட்டி பெருந்துறையில் திமுக கொடி கம்பம் நடும் பணி