கரூர், டிச. 20: கரூர் தனியார் உணவகத்தில் மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில் மருந்தாளுநர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது.கரூரில் உள்ள அனைத்து மருந்தாளுநர்களும் இந்த பயிலரங்கில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு, நகர்நல அலுவலர் சரவணன், மருந்து கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குநர் கார்த்திக்கேயன், மருந்துகள் ஆய்வாளர் லட்சுமணதாஸ் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு, மருந்தாளுநர்களிடம் மருந்துகளை கையாளும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினர்.
இந்த பயிலரங்கில், மருத்துவமனை இல்லாத மருந்தகங்களுக்கும், மருத்துவமனைகளில் இயங்கி வரும் மருந்தகங்களுக்கும் ஒவர் தி கவுண்டர் விற்பனையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கலந்து கொண்ட அனைவரும் எடுத்துரைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மேலை பழனியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post மருந்தாளுநர்களுக்கான பயிலரங்கம் appeared first on Dinakaran.