×

ஒய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கரூரில் ஜனவரி 3ம் தேதி நடக்கிறது

 

கரூர், டிச. 18: கரூர் மாவட்ட ஒய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜனவரி 3ம்தேதி நடக்கிறது. கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறி ப்பு:கரூர் மாவட்ட ஒய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜனவரி 3ம்தேதி வெள்ளிக்கிழமை (அடுத்தாண்டு) காலை 10.30 மணிக்கு கரூர் மாவட்ட கலெக்டர் தலைமையிலும் மற்றும் சென்னை கருவூலம் மற்றும் கணக்குத்துறை அலுவலர்கள் முன்னிலையிலும் கரூர் மாவட்ட அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடத்தப்படவுள்ளது.

எனவே, ஒய்வூதியதாரர்கள் தங்கள் குறைகள் தொடர்பான மனுக்களை (இரட்டை பிரிதிகளில்) கரூர் மாவட்ட கலெக்டருக்கு ஒய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் மனு என்று எழுதப்பட்ட உறையில், அஞ்சல் மூலமாகவோ அல்லது கரூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரிடமோ (கணக்குகள்) நேரிலோ டிசம்பர் 31ம்தேதிககுள் சமர்ப்பிக்கலாம். அல்லது ஜனவரி 3ம்தேதி நேரடியாக மனு அளிக்கலாம்.இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கரூரில் ஜனவரி 3ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Pensioners' Grievance Redressal Day ,Karur ,Karur District Pensioners' ,Grievance Redressal Day ,Karur District ,Dinakaran ,
× RELATED கரூர் அருகே பிரபல ரவுடி தலை துண்டித்துக் கொலை!!