கரூர், டிச. 19: கரூர் ரயில்வே நிலையம் அருகே இறந்து கிடந்த முதியவர் யார்? என்பது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் ரயில்வே நிலைய வளாகத்தை ஒட்டி அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக இந்த பகுதி விஏஒ டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், அடையாளம் தெரியாத முதியவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்து போனவர் யார் என்பது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கினறனர்.
The post கரூர் ரயில் நிலையம் அருகே முதியவர் மர்ம சாவு: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.