×

மழைக்கால நோய்கள் வராமல் தடுக்க பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும்: மாநகரட்சிக்கு கோரிக்கை

 

கரூர், டிச. 17: மழைக்கால நோய்கள் வராமல் தடுக்க தேவையான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு மாத ங்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்திலும் விட்டு விட்டு இரண்டு மாதங்களாக மழை பெய்து வருகிறது.

தொடர் மழையின் காரணமாக சீதோஷ்ணநிலையில் மாற்றம் ஏற்பட்டு, பெரும்பாலான பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி பல்வேறு தொந்தரவுகளை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.இதனை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, வீடுகள் தோறும் அபேட் மருந்து தெளிப்பது, குடிநீரில் குளோரினேஷன் கலந்து கொண்டு விநியோகம் செய்வது போன்ற பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போதைய நிலையில், கரூர் மாநகராட்சி பகுதியில் சீதோஷ்ணநிலை மாற்றம் காரணமாக, காய்ச்சல், சளி போன்ற பல்வேறு தொந்தரவுகள் காரணமாகவும், இரவு நேரங்களில் கொசுக்களாலும் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இதுபோன்றவற்றை கட்டுப்படுத்தும் வகையில், தெருக்களை தூய்மையாக பராமரிப்பது போன்ற பாதுகாப்பு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post மழைக்கால நோய்கள் வராமல் தடுக்க பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும்: மாநகரட்சிக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Karur ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நாட்டிலேயே குறைந்த விலையில்...