×

நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தினர் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம்

 

கரூர், டிச. 20: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில் தற்செயல் விடுப்பு எடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தாசில்தார் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், தரகம்பட்டி தாலுகா அலுவலகம், மாயனு£ர் தாலுகா அலுவலகம் ஆகிய பகுதிகளில் இந்த அமைப்பின் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். அனைத்து நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். களப் பணியாளர்களின் குறை க்க வேண்டும் என்பன போன்ற 9 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

The post நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தினர் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Survey Officers' Association ,Karur ,Tamil Nadu Survey Officers' Association ,Karur Tahsildar's Office ,District Collector's Office ,Taragampatti Taluka Office ,Dinakaran ,
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில...