×

நாடாளுமன்ற துளிகள்

* முன்கூட்டியே ஓய்வு திட்டம் இல்லை
மாநிலங்களவையில் ஒன்றிய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலமாக அளித்த பதிலில், ‘‘பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ஒன்றிய அரசு ஊழியர்கள் சிவில் சர்வீஸ் ஓய்வூதிய விதி 2021, அனைத்திந்திய சேவைகள் விதிகள்( இறப்பு மற்றும் ஓய்வூதிய பலன்கள்)1958 போன்றவற்றின் கீழ் முன்கூட்டியே ஓய்வுபெறுவதை தேர்ந்தெடுக்க உரிமை உள்ளது. ஆனால் ஊழியர்கள் முன்கூட்டியே ஓய்வுபெறுவது தொடர்பான திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

* 4 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லை
டெல்லியில் பேசிய ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சர் சிஆர் படீல் கூறுகையில், ‘‘நாட்டில் கிராமங்களில் குடிநீர் குழாய் இணைப்புகளை உறுதி செய்வதற்கான காலக்கெடு கடந்துவிட்டது. இன்னும் 4 கோடி குடும்பங்கள் குழாய் நீ்ர் இணைப்பு இல்லாமல் உள்ளன. அந்தந்த மாநிலங்கள் இந்த செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது” என்றார்.

* 1.12 கோடி குறைகளுக்கு தீர்வு
அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில், கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் குறை தீர்வு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் மூலமாக 1.12கோடி பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 23,24,323 குறைகளுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

* எஸ்சி, எஸ்டிக்களின் பிரதிநிதித்துவம்
அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த எழுத்து மூலமான பதிலில், ‘‘எஸ்சி மற்றும் எஸ்டியினரின் பிரதிநிதித்துவம் முறையே 15% மற்றும் 7.5சதவீதம் என நிர்ணயிக்கப்பட்ட வரம்பில் உள்ளது. நேரடி ஆட்கள்சேர்ப்பின் மூலமாக ஓபிசிக்களின் பிரதிநிதித்துவம் கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து 27சதவீதமாக உள்ளது. பல்வேறுஅமைச்சகங்கள், துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர் நடவடிக்கையாகும். காலிபணியிடங்களை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள் அவ்வப்போது குறிப்பிட்ட காலத்திற்குள் நிரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டுள்ள ரோஸ்கர் மேளா மூலமாக காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post நாடாளுமன்ற துளிகள் appeared first on Dinakaran.

Tags : Union ,Minister ,of Welfare ,Union for Personnel Welfare ,Jitendra Singh ,All ,India ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு உயர் பதவிகளில் தனியார்...