விஸ்வாமித்திரர் கோயிலில் ஓபிஎஸ் தியானம்

கூடங்குளம்: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே விஜயாபதியில் உள்ள விஸ்வாமித்திரர் கோயிலுக்கு நேற்று காலை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வந்தார். ஹோம குண்ட கணபதியை வணங்கினார். பின்னர் விஸ்வாமித்திர மகரிஷி சன்னிதானத்தில், தரையில் அமர்ந்து தியானம் செய்தார். சிவன், காளி சந்நிதி சிறப்பு பூஜைகளில் பங்கேற்றார். முன்னதாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

The post விஸ்வாமித்திரர் கோயிலில் ஓபிஎஸ் தியானம் appeared first on Dinakaran.

Related Stories: