குத்தம்பாக்கம் ஊராட்சியில் ரூ. 17 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம்: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: குத்தம்பாக்கம் ஊராட்சியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கான பூமி பூஜையை ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கம் ஊராட்சி, இருளபாளையம் கிராமம் உள்ளது. இங்கு நீண்ட காலமாக மழலையர்கள் பயிலும் அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டுமென கிராம மக்கள் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமியிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட எம்எல்ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.17 லட்சம் உடனடியாக ஒதுக்கீடு செய்தார். இதனைத் தொடர்ந்து புதிய அங்கன்வாடி மையகட்டிடம் கட்ட பூமி பூஜை நேற்று நடந்தது.

இதில், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் டி.தேசிங்கு தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஊராட்சி தலைவர் கே.எஸ்.ராஜசேகர், துணைத் தலைவர் உஷாநந்தினி வரதராஜன், வார்டு உறுப்பினர்கள் கண்ணன், தணிகைவேல் முன்னிலை வகித்தனர். மேலும், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் ஜெ.சாக்ரடீஸ், பா.கந்தன், ரமேஷ், பொன்முருகன், துரை, ராஜேஷ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

The post குத்தம்பாக்கம் ஊராட்சியில் ரூ. 17 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம்: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: