சித்த மருத்துவம் பற்றி விழிப்புணர்வு முகாம்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, மணலி ஆரம்ப சுகாதார மைய சித்த மருத்துவ பிரிவு சார்பில், 7ம் ஆண்டு சித்தர் திருநாளை முன்னிட்டு சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பாடசாலை தெருவில் உள்ள சித்த மருத்துவமனையில் நடந்தது. சித்த மருத்துவர் சரண்யா ஷாலினி தலைமை வகித்தார். நோயில்லா வாழ்வில் உணவு முறைகள் குறித்தும் பல்வேறு நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் உள்ள பயன்கள் குறித்தும் முகாமில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விளக்கப்பட்டது. அப்போது மூலிகை மருந்துகள் செடிகள், சிறுதானியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. முன்னதாக சித்தரின் படத்திற்கு மலர்தூவி மாலை அணிவித்து வணங்கினர். தொடர்ந்து மூலிகை தொடர்பான புத்தகங்கள் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவர்கள் தனுஷ் அபிநயா, மோனிகா மற்றும் மருந்தாளுனர்கள், பொதுமக்கள் உள்பட பல பங்கேற்றனர்.

The post சித்த மருத்துவம் பற்றி விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: