விபத்தில் சிக்கிய சரக்கு லாரி மீது பஸ் மோதியது: பயணிகள் தப்பினர்

புழல்: புழல் அருகே சாலை தடுப்பு மீது மோதி விபத்திற்குள்ளான லாரி மீது மாநகர பேருந்து மோதியது. அதிஷ்டவசமாக பயணிகள் தப்பினர். மாதவரத்தில் இருந்து நேற்று காலை சரக்கு லாரி ஒன்று செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தது. புழல் அடுத்த தண்டல்கழகி பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி, சென்டர் மீடியன் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, கோயம்பேட்டில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற (தடம் எண்:114) மாநகர பேருந்து விபத்துக்குள்ளான சரக்கு லாரி மீது மோதியது.
இதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது. அதிஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர். இச்சம்பவதால் புழல் – செங்குன்றம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விபத்தில் சிக்கிய சரக்கு லாரி மீது பஸ் மோதியது: பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: