துணைத் தலைவர் சே.ஜோதி, இணை செயலாளர் எஸ்.ராஜசேகர், மாவட்ட பொருளாளர் ஒய்.தாலிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மாவட்ட செயலாளர் பிரதீப் ஹரேஷ்குமார் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். பிற சங்க நிர்வாகிகளான யோகராசு, கோ.இளங்கோவன் உள்பட பலர் அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். முடிவில் கோட்டப் பொருளாளர் நாராயணன் நன்றி கூறினார். இதில், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அண்ணா குபேரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது, அவர் பேசும் போது, நில அளவை அலுவலர்களின் கோரிக்கையை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் வருகிற ஜனவரி மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்து பேசினார்.
திருத்தணி: தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம் 2ம் கட்டமாக நேற்று ஒரு நாள் அடையாளத் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் பணியாற்றி வரும் சர்வேயர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து பணியை புறக்கணித்தனர். இதனால், வட்டாட்சியர் அலுவலகங்களில் சர்வேயர் பிரிவுகள் வெறிச்சோடி நில அளவை பணிகள் பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் 3ம் கட்டமாக வரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தொடர் 48 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post நில அளவை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.