ஐசிஎப்/தெற்கு ரயில்வே பயிற்சி முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் வேலை : ரயில்வே அமைச்சரிடம் துரை வைகோ கோரிக்கை

சென்னை: ஐசிஎப்/தெற்கு ரயில்வே பயிற்சி முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என ரயில்வே அமைச்சரை சந்தித்து திருச்சி எம்.பி. துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ வெளியிட்ட அறிக்கை: நானும், தலைவர் வைகோவும் சென்று டெல்லியில் ஒன்றிய ரயில்வே அமைச்சரை சந்தித்து உரையாடி, திருச்சி மக்களுக்கு தேவையான ரயில்வே துறை சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம்.

1998 முதல் 2016 வரை இந்திய ரயில்வேயில் ஐசிஎப்/தெற்கு ரயில்வே பயிற்சி முடித்த அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும். திருச்சி மாவட்டம் ரங்கம் தாலுகா, கோவிலூர் மற்றும் நந்தவனம் பகுதிகளில் இடையே சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். மேலும் கோவிட் தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததைப்போல சமுத்திரம் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும், எம்.கே கோட்டை மஞ்சத்திடல் கம்பி கேட் பகுதியில் சுரங்கப்பாதைக்கு பதிலாக ஆர்.ஓ.பி கட்ட அனுமதி அளிக்க வேண்டும்.

திருவெறும்பூர் மேலக்குமரேசபுரம் பகுதியில் எல்.சி 317/ஈ கேட் இடத்தில் ஆர்.ஓ.பி கட்ட அனுமதி அளிக்க வேண்டும், திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல ேவண்டும் என்ற பல கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் அமைச்சரிடம் கடிதமாக கொடுக்கப்பட்டது. கோரிக்கை கடிதத்தைப் பெற்றுக் கொண்ட ஒன்றிய ரயில்வே அமைச்சர், பரிசீலித்து விட்டு, நிச்சயம் நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு துரை வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.

The post ஐசிஎப்/தெற்கு ரயில்வே பயிற்சி முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் வேலை : ரயில்வே அமைச்சரிடம் துரை வைகோ கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: